இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  இன்று மூன்று சொல் : புல்வாய், இரலை, கலை .  இச்சொற்களை பகுப்பது எப்படி?  புல்வாய் = புல் + வாய் . புல்லையே பெரும்பாலும் தின்பது. சில மான் வகைகள்,இலை, தழைகளை உண்ணும். 'புல்' என்பதை 'சிறிய' என பொருள் கொண்டால்,  'சிறிய வாய்' உடையது எனவும் பொருள் கொள்ளலாம்.  இரலை = இரு + அலை . இரண்டு அலையலையாக நீளும் கொம்புகளை உடைய ஆண் மான்.  1. கலை = க் + அலை . மெய் + மேலும் கீழுமாக அலைபோல். உடலே அலைபோல துள்ளும் பெண்மான்.  2. கலை = கல் + ஐ . அசையாமை + பண்புப் பெயர் விகுதி. அசையாமல் நிற்பது, கலைமான்.  இவ்வாறு, எச்சொல்லுக்கும் இணையான அகராதிப் பொருளை நினைவில் கொள்ளாமல், சொல்லின் பொருட்காரணம் அறிந்து கற்றால், சொல்லும் பொருளும் என்றும் மறவாது .