இன்று மூன்று சொல் : புல்வாய், இரலை, கலை.
இச்சொற்களை பகுப்பது எப்படி?
புல்வாய் = புல் + வாய். புல்லையே பெரும்பாலும் தின்பது. சில மான் வகைகள்,இலை, தழைகளை உண்ணும். 'புல்' என்பதை 'சிறிய' என பொருள் கொண்டால், 'சிறிய வாய்' உடையது எனவும் பொருள் கொள்ளலாம்.
இரலை = இரு + அலை. இரண்டு அலையலையாக நீளும் கொம்புகளை உடைய ஆண் மான்.
1. கலை = க் + அலை. மெய் + மேலும் கீழுமாக அலைபோல். உடலே அலைபோல துள்ளும் பெண்மான்.
2. கலை = கல் + ஐ. அசையாமை + பண்புப் பெயர் விகுதி. அசையாமல் நிற்பது, கலைமான்.
இவ்வாறு, எச்சொல்லுக்கும் இணையான அகராதிப் பொருளை நினைவில் கொள்ளாமல், சொல்லின் பொருட்காரணம் அறிந்து கற்றால், சொல்லும் பொருளும் என்றும் மறவாது.
கருத்துகள்
கருத்துரையிடுக